Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது படுகாயமடைந்திருந்த மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரி இன்று (08) புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த பாரதூரமான வன்முறைகள், அதற்கான பின்னணி மற்றும் இச்சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து மிக விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் தற்பொழுது விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்த மூவர் அடங்கிய குழு, சிறைச்சாலையின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை!

வைகாசி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களுக்கு நாசா அவசர உத்தரவு!

ஆனி 5, 2026
இலங்கை

கொழும்பில் எதிர்க்கட்சிகள் சத்தியாகிரகம்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube