Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

சித்திரை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி இன்று (10) முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விசேட புகையிரத சேவைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

இதன்படி,
கொழும்பு கோட்டை – அனுராதபுரம்,
அனுராதபுரம் – காங்கேசன்துறை,
மருதானை – மாத்தறை,
மருதானை – பெலியத்த
ஆகிய ரயில் பாதைகளினூடாக இந்த விசேட புகையிரதங்கள் இயக்கப்படவுள்ளன

இதேவேளை பெலியத்தவிலிருந்து மஹவ வரை வழக்கமாக பயணிக்கும் ‘ரஜரட்ட ரஜினி’ புகையிரத சேவை புத்தாண்டு காலத்தில் அனுராதபுரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை பயணிக்கும் அலுவலக புகையிரதம் , நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) மாத்திரம் அனுராதபுரம் வரை இயக்கப்படும்.

பொதுமக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கும், மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புகையிரதங்களுக்கு மேலதிகமாக, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகளும் விசேடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு விசேட கோரிக்கை!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் கத்திக்குத்து

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை 27 கூடுகிறது!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube