ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த லீக் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 26ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியானது, தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்த இரண்டு அணிகளும் மோதவுள்ள மற்றொரு போட்டியானது திட்டமிட்டபடி வரும் மே மாதம் 21ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த மண்ணில் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
