Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

சித்திரை 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நாளை (ஏப்ரல் 21) மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டத்திலுள்ள உள்ள சில பிரதேசங்களிலும் வெப்பம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பச் சுட்டெண் ‘அவதானம்’ மட்டத்தில் இருக்கும் போது நீண்ட நேரம் வெயிலில் இருப்பதன் மூலம் உடல் சோர்வு ஏற்படலாம், தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாகம் ஏற்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்த்து, நிழலான இடங்களில் இருக்கவும்,, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தவும், மென்மையான, வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை வங்கி கொள்ளை: பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

ஆனி 11, 2026
இலங்கை

2025 இல் அரச நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் 17% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது!

ஆனி 12, 2026
Breaking Newsஇலங்கைவானிலை

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube