Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

எரிபொருள் விநியோகத்தில் தொடரும் QR குறியீட்டு முறைமை!

சித்திரை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில்,

“உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய QR குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும்.” எனத் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்துப் பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும்.

உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தருக்கு இடமாற்றம்!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹபாகேவில் 200 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

ஆடி 20, 2026
உலகம்

27 ஆண்டுகளுக்கு பின்னர் புளு மைக்ரோ மூன் இன்று!

வைகாசி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் வைபவரீதியாக ஆரம்பம்!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube