தங்கத்தின் விலையில் இன்று அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
