மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம்தான் “29”. இந்த படத்தில் விது , ப்ரீத்தி, அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் க்ரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் மே மாதம் 8 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இன்றைய தினம் இந்த திரைப்படத்தின் நான்காவது பாடலான “பொல்லாத ஆசை ” பாடல் வெளியாகியுள்ளது.
