Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்

சித்திரை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில் முன்னாள் நட்சத்திர வீரர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நிர்வாகத் துறை நிபுணர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்கால குழுவில் ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி, பிரகாஷ் ஷாஃப்டர், துஷிர ரதெல்ல, அவந்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டாகப் பதவி விலகியது.

விளையாட்டுத்துறைச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகள் தற்காலிகமாக விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதன் பணிகளை முறையாகக் கொண்டு செல்லவும், தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும் எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் மே – 27 யில் ஹஜ் பெருநாள்…!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கு VRS நட்ட ஈடு 2 கட்டங்களாக வழங்கப்படும் – வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க!

வைகாசி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கடுமையான வெப்பநிலையினால் 7 பேர் பலி!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube