இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் :லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் ” நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் ” திரைப்படத்தில் அறிமுகமான பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நாக துர்கா, இயக்குநர்கள் செல்வராகவன்- கே எஸ் ரவிக்குமார் , வனிதா விஜயகுமார், ரம்யா ,ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரதீப் மற்றும் வெய்ன் பாவே ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், கோடைகால விடுமுறையில் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
