Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

விக்ரம் பிரபு – சித்தார்த் புதிய படம் தொடக்கம்

#VikramPrabhu #YuvanShankarRaja #Siddharth #NewMovie #Kollywood #TamilCinema #CommercialFilm #MovieLaunch #TamilFilmNews #EntertainmentNews

ஜூன் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 26வது படமாக அமைந்துள்ளது. வித்தியாசமான களத்தில் உருவாகும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தரமான திரைப்படங்களை தயாரித்தும், வெற்றிகரமாக விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது. தரமான தொழில்நுட்பம் மற்றும் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.

மேலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த!

மே 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரவி கருணாநாயக்காவின் வீட்டுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விஜயம்

ஆகஸ்ட் 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மரதன் போட்டியின் இடையில் மாதவிடாய் – இரத்தத்தோடு போட்டியை நிறைவு செய்த சீன வீராங்கனை

ஜூலை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தடுப்பு காவல்!

ஜூலை 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube