நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, வடமத்திய, கிழக்கு, மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் ‘மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு’ ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய, சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
