Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

May 1st | International | Workers' Day | Police Protection | Special Transport | Srilanka | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாளை வெள்ளிக்கிழமை (01) உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்கள் கொழும்பு நகரை மையமாக கொண்டு நடைபெறவுள்ளன. அதேவேளை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கொண்டாட்டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மே தின நிகழ்வுகளை அமைதியான முறையில் நடத்துவதற்கான சூழலை உருவாக்குதல், பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு பொலிஸ் மா அதிபர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கொழும்பு நகரை மையமாக கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் நடத்தப்படவுள்ள பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் வீதி வரைபடங்கள் குறித்த விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களு கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 23, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பில் ராகுல் காந்தி கடும் விசனம்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube