Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மையினை தெளித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது!

School Students | Teacher | School Uniform | Ink | Galle | Srilanka | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காலிப் சர்வதேச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் பாடசாலை சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சர்வதேசப் பாடசாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஆசிரியராகப் பணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலியில் சாரேவன்துக்கடை சந்தியில் வைத்து, அங்கு சென்ற பல மாணவிகளின் சீருடைகளின் பின்புறத்தில் இவர் சிவப்பு மையினைத் தெளித்துள்ளார்.

இந்தச் செயல் அங்கிருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காலி பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காலி பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஆனி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழர்களுக்கு எதிராக நாம் போரை முன்னெடுக்கவில்லை

வைகாசி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் மே – 27 யில் ஹஜ் பெருநாள்…!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube