Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

Maskeliya | Hospital | Doctors | Nurs | Hospital Staff | strike | Srilanka | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட முழு ஊழியர்களும் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (28) ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரை தாக்குவதற்காக மற்றுமொரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதனைத் தடுக்க முயன்ற வைத்தியசாலை ஊழியர் மற்றும் தாதியர் ஒருவரை குறித்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.என். ரிசான் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாநகர சபையினால் அனுமதியளிக்கப்படாத கட்டிடமே இடிந்து விழுந்தது – கண்டி மேயர்

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube