பாதுக்க, மெதகேவத்த கல்கந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட விடுதி ஒன்றை, பாதுக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் வியாழக்கிழமை (14) முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது 05 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் உட்பட மொத்தம் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட 14,000 ரூபாய் பணம், சூதாட்டப் பலகை, மேலதிகமாக சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட 46,660 ரூபாய் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான, பதிவு செய்யப்படாத மற்றும் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீகொடை, பாதுக்க, ஹோமாகம, மில்லேவ மற்றும் கும்புக மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
