Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ 3 நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்!

Russia | Health Minister | Mikhail Murashko | Nalinda Jayatissa | Srilanka | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் விஜயமாக மே 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸாவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இத்தூதுக்குழுவினர் ஒரு சிறப்பு கலந்துரையாட யாடலில் ஈடுபடஉள்ளனர்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் மே 04 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைப் பார்வையிடவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சரும் அவரது குழுவினரும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு (பரிமாற்றங்கள், பாட நெறிகள் சம்பந்தமான ), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கியப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவும் அவரது குழுவினரும் தங்களது மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, மே 05 அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

முதியோர் பராமரிப்புக்கு ரோபோ

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்க நகை கொள்ளைச் சபாவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

ஆனி 5, 2026
இலங்கை

தேசிய நீர்கட்டண கொள்கை தயாரிப்பு!

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குழந்தைகளுக்கான விசேட மலேரியா மருந்து!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube