இலங்கையின் பலம் பந்துவீச்சை விட துடுப்பாட்டத்தில்தான் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்த விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர், கிரிக்கெட்என்பது “பந்துவீச்சை விட துடுப்பாட்ட விளையாட்டு” எனக் குறிப்பிட்டார்.
மேலும், அண்மைய T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்ததற்கு வீரர்கள் மட்டுமே காரணமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துகளை அவர் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்ற வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.
