Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பில் ராகுல் காந்தி கடும் விசனம்!

The Great Nicobar | India | Nicobar Island | ₹81,000-crore | Rahul Gandhi | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியாவின் சுமார் 81,000 கோடி மதிப்புள்ள கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

“இது நம்முடைய வாழ்நாளில் நமது நாட்டின் இயற்கை மற்றும் பழங்குடி பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய ஊழல் மற்றும் மிகவும் மோசமான குற்றமாகும்,” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான நிகோபார் தீவிற்கு ராகுல் காந்தி சென்றதைத் தொடர்ந்து கிரேட் நிகோபார் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்தியாவின் தொலைதூர தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரேட் நிகோபார் தீவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் சரக்கு மாற்றுத் துறைமுகம், விமான நிலையம், நகரம் மற்றும் மின் நிலையம் ஆகியவை அடங்கும்.

பொருளாதார மற்றும் உத்திசார் கண்ணோட்டத்தில், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கியமானது என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் ஷொம்பென் மற்றும் நிகோபரீஸ் பழங்குடிகள் இந்தத் திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி .குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஒயா – கார்லபேக் டிவிசன் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான உதவி கோரல்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறை – திருக்கோவிலில் காட்டு யானை தாக்குதலுக்கு ஒருவர் பலி!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube