Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரோக்கியமற்ற துரித உணவுகளுக்கு தடை!

Food Safety | junk food | Banned | Srilanka | QuickTamilNews

வைகாசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் வானிலை மற்றும் பாரம்பரிய விவசாய முறைகள் காரணமாக இயற்கையான சத்துமிக்க உணவுகள் கிடைக்கப்பெற்றாலும், ஆரோக்கியமற்ற அல்லது குறைந்த சத்துடைய உணவுகளின் நுகர்வு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியத்திற்குத் தீங்கான துரித உணவுகளை முழுமையாகத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் துரித உணவுகளுக்கு அடிமையாகி வருவதாகவும், அதே நேரத்தில் பல அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உணவைத் தவிர்ப்பதுடன், ஊட்டச்சத்து இல்லாத அல்லது மிகக் குறைந்த ஊட்டச்சத்துள்ள துரித உணவுகளைத் தேர்ந்தெடுப்பதாகவும் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன குறிப்பிட்டார்.

இந்தத் தடை அவசியமானதாக இருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்றும், இந்த முடிவுகள் எளிதாக அரசியல் மயப்படுத்தப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்த உணவுகளைத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

வயம்ப பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரேணுகா சில்வாவின் ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி போன்ற காரணங்களால் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பலரையும் மலிவான, ஊட்டச்சத்து குறைந்த உணவு விருப்பங்களை நோக்கித் தள்ளியுள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் வடமராட்சியில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளை!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை: இளைஞர் கைது!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube