ஹட்டன் – பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
