Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 சிறைக்காவலர்கள் கைது!

Welikada Prison | Prisoner | Murder | Prison guards | police | Srilanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த மூன்று சிறைக்காவலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய நிலையில், பொரளை பகுதியில் வைத்து அதிகாரிகளால் விரட்டிப் பிடிக்கப்பட்டார். இதன்போது கைதிக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார். 5,000 ரூபாய் அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

சிறை அதிகாரிகள் அவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொரளை பொலிஸாரின் இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றன. ஏற்கனவே 10 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையிலும் இதேபோன்றதொரு மரணம் பதிவாகியிருந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாதீவு ரஜமஹா விகாரையில் 88 அடி உயரமுடைய புத்தர் சிலை திறந்து வாய்ப்பு!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதயாத்திரை நாயை தாக்கியவர் கைது!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொருளாதார மீட்சிக்கு அங்கீகாரம் – உயர்நடுத்தர வருமான நாடாக மீண்டும் இலங்கை

ஆடி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரினை வழமைபோலவே செயற்படுகிறது – அமெரிக்கா

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube