Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் த.வெ.க தலைவர் கவனம் செலுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

TVK | Vijay | SriLanka | Kajenthiran Ponnampalam | QuickTamilNews

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில்,கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் வழங்கிய பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. அன்று எமது மக்களின் துயர்துடைக்க எவ்வாறெல்லாம் தமிழ்நாடு துணை நின்றதோ, அதே போன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையொன்றைப் படைத்து, மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள உங்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாகத் தங்களது தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் பேரவலத்திற்குப் பிறகும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், எமது அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய வலுவைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அந்தவகையில், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் நீங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் எமது நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, எமது தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எங்களுக்குண்டு. தங்களின் பணி சிறக்க எமது வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் அடையாளந் தெரியாத சடலங்களினால் பரபரப்பு

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழப்ப நிலையை ஏற்படுத்திய சாமர மீது சபாநாயகரின் நடவடிக்கை!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேயிலைத் துறையை பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப் புலனாய்வுகளில் புதிய திருப்பம்: இராணுவத் தளபதி மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இடையிலான நிலைமை குறித்து அம்பலம்!

சித்திரை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube