Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் வெப்பநிலையினால் தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பு!

Skin Cancer | Hot Weather | Sun Scream | Doctors | SriLanka | QuickTamilNews

வைகாசி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயர் வெப்பநிலை காரணமாக தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வைத்திய ஆலோசகர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஹசந்தி ஜெயலத் தெரிவிக்கையில்,

வருடம்தோறும் சுமார் 35,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 15,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக குறைந்தபட்சம் SPF 30 பாதுகாப்பு கொண்ட சூரியக்கதிர் பாதுகாப்புக் கிரீமை பயன்படுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்.

வெளியில் செல்லும் போது தொப்பி உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளை அணிவதுடன், தொடர்ந்து சூரியக்கதிர் பாதுகாப்புக் கிரீமை பயன்படுத்த வேண்டும்.

தோல் புற்றுநோய்களில் பேசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மற்றும் மெலனோமா ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றில் மெலனோமா ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் வேகமாகப் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.

மேலும், சில சரும வெண்மைப்படுத்தும் கிரீம்களில் ஹைட்ரோகுயினோன், பாதரசம் மற்றும் ஸ்டீராய்ட்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை இரசாயனங்கள் சருமத்தின் இயற்கை பாதுகாப்பை பலவீனப்படுத்தி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறிப்பாக அதிக சூரிய ஒளி காணப்படும் பகுதிகளில், தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பொதுமக்கள் மத்தியில் விரிவான அறிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசுடமையாக்க அவதானம்!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனேடிய அரசு சவூதி அரசுடன் கலந்துரையாடி அனோஜனுக்கு பொதுமன்னிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் – தமிழர் பேரவை

புரட்டாதி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 அஸ்வெசும நிதி மோசடி – சந்தேகநபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube