Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி முறைகேடு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்!

Coal Import | Illegal | investigation | SriLanka | QuickTamilNews

வைகாசி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது முதல்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

நிலக்கரி இறக்குமதி, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் அது சார்ந்த ஏனைய செயற்பாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து விசாரிப்பதே இந்த ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும்.

இந்த ஆணைக்குழு கொழும்பு 12, அதிக்கரன மாவத்தை, ‘அதிக்கரன பியச’ வளாகத்திலுள்ள நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 05வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ இருந்தால், அவற்றை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.நெடுந்தீவை இலங்கையின் முதல் ‘பூஜ்ய உமிழ்வு’ சுற்றுலா தலமாக மாற்ற அரசு திட்டம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

ஆனி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பீகாரில் பிரதமர் மோடிக்கு 112 கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்டப்படும்!

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!

ஆவணி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube