Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

Ampitiya Sumanarathna Thero | Batticaloa | Land Issue | Srilanka | QuickTamilNews

வைகாசி 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியல் சூழ்ச்சிகளினாலும், பொய்களினாலும் ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டை ஒரு தேசமாக முன்னோக்கி நகர்த்த வேண்டுமானால், உண்மையான தேசப்பற்றுள்ள ஒரு தலைமைத்துவம் அவசியமாகும். அந்த வகையில், திலித் ஜயவீரவே எதிர்காலத்தில் இந்நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தகுதியுள்ள ஒரே தலைவர் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை எல்லைப்பகுதியான தொப்பிகல, திவலபத்தான பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிங்கள விவசாயிகள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்குச் சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வெள்ளிக்கிழமை (8) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதால் எவரும் அச்சப்படத் தேவையில்லை. ஒரு தேசமாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், கலாசாரமும் ஒழுக்கமும் உள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் மத்திய வங்கிக் கொள்ளை முதல் பல மோசடிகள் வரை இடம்பெற்று, மக்கள் இன்று நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு சீரழிந்த கலாசாரத்தை மாற்றி அமைக்க நாம் உயிரைத் தியாகம் செய்தாவது பாடுபடுவோம்.

தற்போது அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சிறந்த அடையாளமாக திலித் ஜயவீரவை நான் காண்கின்றேன். நான் ஒரு ராஜபக்ச நிக்காயவைச் சேர்ந்த தேரராக இருந்தபோதிலும், தற்போதைய அரசியல் சூழலில் நாட்டைப் பொறுப்பேற்கக் கூடிய ஒரு வலுவான தலைவராக அவர் தென்படுகிறார். எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் நாட்டுக்கு ஒரு விமோசனம் கிடைக்குமானால், அது திலித் ஜயவீர போன்ற தலைவர்களாலேயே சாத்தியமாகும்.

அதேவேளை, தொப்பிகல மேய்ச்சல் தரை விவகாரத்தில் இன்று கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் கொண்டாட வேண்டும். கடந்த 30 வருட கால யுத்தத்தினால் சிங்கள மக்கள் தமது பூர்வீக விவசாய நிலங்களை இழந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்றவர்கள் இது அவர்களின் மேய்ச்சல் தரை எனக்கூறி, பல்வேறு வாதங்களை முன்வைத்து இந்த நிலங்களை அபகரிக்க முயற்சித்தனர். எனினும், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் ஊடாக, இன்று இந்த நிலங்கள் மீண்டும் விவசாயிகளுக்கே கிடைத்துள்ளன.

நீதிமன்றம் உரிமையை வழங்கியிருந்தாலும், இந்த நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் தேவையான உரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும். இன்று நாட்டில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத வறுமை நிலை காணப்படுகிறது. எனவே, இந்த நிலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்து, நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிர்வாண காணொளியை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு – 62 வயது வயோதிபப் பெண் கைது!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியுள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube