கேகாலை பிரதான வீதியிலுள்ள தங்க அடகுக் கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய மீபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் புதன்கிழமை (24) கட்டுகஸ்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்ட 38.39 கிராம் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை (23) இரு நபர்கள் அடகுக் கடைக்குள் நுழைந்து பராமரிப்பாளரை காயப்படுத்தி அச்சுறுத்திய பின்னர், சுமார் 2 கோடியே 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வருவதுடன், தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் தேடி வருகின்றது.
