Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் மீட்பு!

Southern Sea | Fisherman | Navy | Galle | SriLanka | QuickTamilNews

வைகாசி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தெற்கு கடற்பரப்பில் தொழில் நிமித்தம் பலநாட்களாக மீன்பிடி படகில் காயங்களோடு தங்கியிருந்த மீனவர் ஒருவரை, இலங்கை கடற்படையினர் துரிதமாகச் செயற்பட்டு மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த 03ஆம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 07 மீனவர்களுடன் குறித்த பலநாள் மீன்பிடி படகு கடலுக்குச் சென்றிருந்தது. தெற்குக் கடற்பரப்பிலிருந்து சுமார் 81 கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, படகிலிருந்த மீனவர் ஒருவர் திடீரென காயமடைந்துள்ளார்.

கொழும்பிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதன்படி, அந்தப் பகுதிக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த ‘MT MAUI’ என்ற வர்த்தகக் கப்பலின் உதவியுடன் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தென்னிலங்கை கடற்படை கட்டளைப் பிரிவிற்குச் சொந்தமான விசைப்படகு ஒன்று குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, வர்த்தகக் கப்பலிலிருந்து மீனவரைப் பொறுப்பேற்றது.

கடற்படை வீரர்களால் மீனவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடல்சார் சமூகத்தினருக்கு ஏற்படும் இவ்வாறான அவசர காலங்களில் உதவுவதற்காக, கொழும்பு MRCC மையத்துடன் இணைந்து கடற்படை எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் நீடிக்கும் பதற்றம்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘GovPay’ டிஜிட்டல் தளம் ஊடாக 3.86 பில்லியன் பரிவர்த்தனைகள்!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube