Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

மாற்றத்துக்கு தயாராகும் தமிழக காவல்துறை

india|police|quicktamilnews

வைகாசி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தவெக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழக காவல் துறை மாற்றத்துக்கு தயாராகியுள்ளது.

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி அமைந்துள்ளது.

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம்.

ஆட்சி அதிகாரத்தில் அமரும் கட்சியினர் தங்களுக்கு ஆதரவான, தேவையான அதிகாரிகளை முக்கிய இடங்களிலும், சட்டம்-ஒழுங்கு, உளவுத் துறை பொறுப்புகளிலும் நியமித்துக் கொள்வார்கள்.

இந்த நடவடிக்கை புதிய அரசு பொறுப்பேற்ற ஓரிரு நாள்களில் எடுக்கப்படும்.

தற்போது தவெக தலையிலான அரசு பொறுப்பேற்று நிலையில், மாநில காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ச.ஜோசப் விஜய், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பான பட்டியலை தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகாரமில்லாத பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பலர் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ளனர்.

அதேபோல அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.

இந்த மாற்றத்தை தமிழக காவல் துறையினர் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேநேரத்தில் சில உயரதிகாரிகள், முக்கிய பொறுப்புகளைப் பெறுவதற்காக தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகளை ரகசியமாகச் சந்தித்து வருகின்றனர். ஆனால் அந்தக் கட்சியின் அதிகார மையம், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது சிறப்பான பாதுகாப்பு வழங்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை நிரூபித்த பின்னர் சட்டப்பேரவையில், தவெக அரசு பெரும்பான்மையை நிருபித்த பின்னரே, ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்வதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேபோல தமிழக உளவுத் துறையில் டிஜிபி தொடங்கி ஆய்வாளர்கள் வரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஷி வீரவன்ச மனுவை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

ஆனி 11, 2026
முக்கியச் செய்திகள்

வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய வரம்புகள்!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube