20முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (12) முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
