Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிசு மரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Trincomalee|Humanrightscmmission|quicktamilnews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிசுவொன்று உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் நிலவுவதாகத் தெரிவித்து, அதன் பெற்றோர் இன்று (13) திருகோணமலை துறைமுகக் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமது சிசுவின் மரணம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தெளிவற்ற மற்றும் முரண்பாடான தகவல்களை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிசு உயிரிழந்ததற்கான உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட காரணம் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மரணத்தில் வைத்தியசாலையின் அணுகுமுறை திருப்தியற்றதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், இதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்:
“எமது சிசுவின் மரணத்திற்கான உண்மையான காரணம் எமக்குத் தெரிய வேண்டும். இந்தச் சம்பவத்தில் பல சந்தேகங்கள் காணப்படுவதால், நாம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன், வைத்தியசாலையின் பொறுப்பற்ற அணுகுமுறை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளோம்,” என்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுகக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் இது குறித்த விளக்கத்தைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது புதிய பேருந்து கட்டணம்!

ஆடி 6, 2026
இலங்கை

காலநிலை மாற்றத்தைக் குறைப்போம் – 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube