Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு உதவிய 69 வயது நபர் கைது!

ganemulla|sanjeewa|death|gun|quicktamil

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன எனனும் சந்தேகநபரை படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 69 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவினர் (CCD) முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (13) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காகக் அழைத்துவரப்பட்டிருந்த போதே ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது சட்டத்தரணி ஒருவரைப் போல வேடமணிந்து நீதிமன்ற அறைக்குள் நுழைந்த ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், வெளிநாடுகளில் வசிக்கும் திட்டமிட்ட குற்ற கும்பல்களுடன் இணைந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டமை, தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ரிப்பீட்டர்’ (Repeater) ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மெகசின்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒஸ்மன் குணசேகர எனும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் தொடர்பாகக் கொழும்பு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கம்! எச்சரிக்கை !

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்- பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றைய வானிலை

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube