Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவிற்கு 5½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

Chilaw | Arachikatuwa | Former Mayor | Jagath Samantha | Remanded | Srilanka | QuickTamilNews

வைகாசி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவிற்கு 5½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால், மேலதிகமாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் இதன்போது நீதிபதி உத்தரவிட்டார்.

ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரரான ஜகத் சமந்த ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்தார். இதன் காரணமாக, இன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மாத்திரமே ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த சிலாபம் மேல் நீதிமன்றம், இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவுடன் தடை!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப்ரக வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் – உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையை பொறுத்தே தீர்மானிக்கப்படும்

ஆடி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது ;இஸ்ரேல் உறுதி

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube