Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்காள விரிகுடாவில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது – இனி இலங்கைக்கு பாதிப்பில்லை!

வைகாசி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கு வடக்கே வங்காள விரிகுடாவில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கையைச் சூழவுள்ள கடல் பரப்பில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்கால வானிலை பகுப்பாய்வுகளின்படி, இந்த வளிமண்டலத் தொகுதி தனது வலிமையை இழந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகள் மற்றும் நாட்டை சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளுக்கு இனி இதனால் எவ்வித பெரிய தாக்கமும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் பிராந்தியங்களில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினரின் பாதுகாப்பு கருதியே இந்த விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முற்றாக வலுவிழந்ததைத் தொடர்ந்து, இந்த வளிமண்டலத் தொகுதி தொடர்பாக வெளியிடப்படும் இறுதி வானிலை அறிக்கை இதுவெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களை காணி உரிமையுடைய தோட்டத் தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் இலக்கு – சஜித் பிரேமதாச

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் – புதிய டெங்கு வைரஸ் பரவலே காரணம்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube