Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துக்கு!

வைகாசி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவி வரும் பலத்த மழையுடனான மோசமான காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிவேக வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் வழிகாட்டல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாகப் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வரம்பிற்குள் பேண வேண்டும்.

பகல் நேரமாக இருந்தாலும் சரி, போதிய வெளிச்சமின்மை காரணமாக வாகனங்களின் முன் பக்க முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்க வேண்டும்.

திடீர் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, தனக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் இடையில் போதியளவு பாதுகாப்பான தூர இடைவெளியைப் பேண வேண்டும்.

மழையினால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், ஒரே தடவையில் திடீரென பிரேக் மிதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நழுவிச் சென்று பாரிய விபத்துக்கள் ஏற்படக்கூடும்.

எனவே, அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்துச் சாரதிகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு, விழிப்புணர்வுடன் வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் IMF தீவிர அவதானம்!

சித்திரை 26, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய சூர்யாவின் “கருப்பு”…. அதிர்ச்சியில் படக்குழு அறிக்கை!

வைகாசி 19, 2026
இலங்கைவானிலை

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube