Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

H-1B விசாவுக்கு ட்ரம்ப் விதித்த கட்டணத்தை ரத்துசெய்தது ஃபெடரல் நீதிமன்றம்!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வெளிநாட்டவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த ஜனதிபதிக்கு அதிகாரம் உண்டு என்ற குடிவரவுச் சட்ட அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த கட்டணத்தை விதித்திருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம், சட்டவிரோதமான வரியாகும் என பொஸ்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் தீர்ப்பளித்துள்ளார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான கட்டணத்தை, கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தியிருந்தார்.

இதற்கு எதிராக 20 மாநிலங்களின் சட்டமா அதிபர்கள் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சர்வதேச திறமையாளர்களை முடக்கும் ட்ரம்பின் முயற்சிக்குக் கிடைத்த வீழ்ச்சி” எனப் மனுதாரர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

அதேவேளை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் – விமல் வீரவன்ச

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி

ஆவணி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 ஈரானிய மாலுமிகள் விடுவிப்பு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கடத்த முயற்சித்த 21 வயது இளைஞன் கைது!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube