Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகமாக பரவும் மூளை காய்ச்சல்!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தியத்தலாவ பகுதியில் 28 நோயாளர்களும் வெலிமடை பகுதியில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் இது பரவினாலும், நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.

இந்த அறிகுறிகள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்றும், முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளர்கள் குணமடைந்து வருவதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மூளைக்காய்ச்சல் உணவு, நீர் மற்றும் நேரடித் தொடர்பு மூலம் பரவக்கூடும் என்பதால் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகள் மூலம் இந்த நோய் மேலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் கூறினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஆனி 8, 2026
இலங்கை

தலவத்துகொட உணவகத்தில் தீ விபத்து; நால்வர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இ.போ.ச பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube