Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி கொள்வனவு முறைகேடு!

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு பரிவர்த்தனைகள் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை ஆராயும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் பி. வி. பந்துலசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நிலக்கரி கொடுக்கல் வாங்கல் முறைகேடுகள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக 28 புகார்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி கொள்வனவு தொடர்பான முறைகேடுகள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் கட்டளைப் பத்திரத்திற்கு அமைவாக இந்த 28 முறைப்பாடுகளும் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன எனவும் ,தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் எனச் செயலாளர் பி. வி. பந்துலசேன மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிர்வாண காணொளியை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு – 62 வயது வயோதிபப் பெண் கைது!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

ஆடி 29, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube