Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கையிட மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்!

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வாழைச்சேனையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) அவரது வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை இந்து கல்லூரியின் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை (25) பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பழைய மாணவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது

இந்த நிலையில் பேத்தாளையில் உள்ள அந்த பகுதி ஊடகவியலாளரான உருத்திரன் வீட்டிற்கு சம்பவ தினமான இன்று பகல் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் முருகானந்தம், பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிக்குமார், பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி வரும் மோகன்ராஜ், பிரதேச சபை காவலாளியாக கடமையாற்றி வரும் மயிலானந்தன், மற்றும் சிறிகரன் ஆகிய குழுவினர் நாளைய ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கையிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கு ஊடகவியவாளர் அதிபர் நன்றாக பாடசாலையை நடத்துகின்றார் என தெரிவித்து இது தேவையற்றது என்னால் வரமுடியாது என அறிவித்துள்ளதையடுத்து அவரை கவனிக்க வேண்டிய வகையில் கவனிப்போம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நாமல் கடும் கண்டனம்!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியலாக்கப்படுகிறது. என நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

வைகாசி 21, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

‘Bitchat’ செயலியை முபாக்க தீர்மானம்

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் பொது சந்தையில் ஏற்பட்ட பதற்றம்!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube