ஜூலை மாதம் இறுதி வரை தேவையான எரிபொருள் தற்போது நாட்டுக்குள் இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்
இந்த மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரும் உயர்வை எதிர்பார்க்க முடியாது என்றும், அதேநேரம் விலை குறைப்பையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்போவதாக சில ஊடக அறிக்கைகள் வெளியானதை அடுத்து, பலரும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதுவரை அத்தகைய எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
