Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள விடுதியொன்றில் இன்று(27) சுமார் 4.00 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் போது அந்த விடுதியில் தங்கியிருந்த 2 குழந்தைகள் தீப்பரவளினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததனால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த குழந்தைகளின் தாய் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாயை பார்ப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி பிள்ளைகளின் தந்தை குழந்தைகளோடு குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் 05 வயதுடைய சந்தனி நிமாஷா மற்றும் 3 வயதுடைய கசுன் மதுசங்க என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விடுதியில் தங்கியிருந்த குழந்தைகளின் தந்தை, சுமார் 2.00 மணியளவில் இரண்டு குழந்தைகளையும் அறையில் வைத்து பூட்டிவிட்டு, மது அருந்த சென்றுள்ளார். அவர் மீண்டும் அறைக்குத் திரும்பிய போதே அறையில் தீப்பிடித்திருந்தது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் அறையிலேயே மயங்கியிருந்த நிலையில் , தந்தையினால் குழந்தைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 2 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

விடுதியின் உணவருந்தும் அறையில் ஏற்பட்ட தீயினை விடுதி ஊழியர்கள் அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுக் குழுவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

IMF அதிகாரிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை!

ஆனி 21, 2026

மஹிந்த, நாமல் மீது – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்றும் 03 என்புகூடுகள் மீட்பு!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube