Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 வயது சிறுவன் தனியாக கொழும்புக்கு செல்லமுயன்ற சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், கொழும்புக்குத் தனியாகப் பேருந்தில் செல்ல முயன்ற போது ஹட்டன் பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று (27) பத்திரமாக மீட்கப்பட்டு ஹட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) பேருந்து நிலைய நேரக் காப்பாளரின் (Time Keeper) சாதுரியமான மற்றும் சமயோசித செயலினாலேயே இந்தச் சிறுவன் பெரும் ஆபத்துகளில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேருந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் பேருந்து நிலைய நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குக் பணம் கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பேருந்தில் ஏற அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார்.

பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகளிடம் அச்சிறுவன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து ஹட்டன் காவல் நிலைய உயர் அதிகாரி தெரிவிக்கையில் காவல்துறை பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர், சிறுவனின் முறையான பெற்றோரை அல்லது பாதுகாவலர்களைக் கண்டறிந்து அவர்களிடம் சிறுவனைப் பத்திரமாக ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை ! – மயூர நெத்திகுமாரகே!

வைகாசி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உறுதியுடன் நிற்போம் – ஈரான்

ஆனி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி வீட்டில் இருந்தவாறே உங்கள் தூரப்பயணத்திற்கான ஆசனங்களை முன்பதிவு செய்யலாம்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube