Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டம் இன்று

ஆடி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை (23) இடம்பெறவுள்ளது.

மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகள் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்கும் நோக்கில், கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தனித்தனியாகத் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டுப் போராட்டமொன்றை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் 31 மில்லியன் ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பாவனைக்கு!

ஆடி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் விபத்து: பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு!

வைகாசி 24, 2026
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube