Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபுதாபி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் புதன்கிழமை (27) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைத் தங்கள் வசம் வைத்திருந்ததோடு, அவற்றுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ‘Like’ மற்றும் ‘Comments’ இட்டமை காரணமாகவே இந்த குழுவினர் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் 23 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் அம்பலாங்கொடை, மாரபன, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுச் சேவை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் இணைந்து அவர்களிடம் நீண்டநேர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு ஜூன் 26 இல்

வைகாசி 21, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கத்தை ஆரம்பித்த சுப்பர் ஸ்டாரின் மனைவி!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வழக்கு தீர்ப்புகளை அறிவித்து ஜனாதிபதி எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறார் – நாமல் ராஜபக்ஷ!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube