நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலி முதல் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளை அவதானிக்குமாறு பொதுமக்களும் மீனவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
