Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் காப்பாற்றப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பங்களாதேஷில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடியை போன்ற பொன்னிற உரோமத்தைக் கொண்ட அரிதான வெள்ளை எருமை ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து தியாகத் திருநாள் குர்பானியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் தியாகத் திருநாள் வழிபாட்டுக்காக இந்த எருமை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருந்தது.

எனினும், இதன் தனித்துவமான தோற்றம் காரணமாக, சமூக ஊடகங்களில் இதன் புகைப்படங்களும் காணொளிகளும் வேகமாகப் பரவி, உலகம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி அமைப்பைப் போன்ற பொன்னிற உரோமத்தைக் கொண்டிருப்பதாலேயே இதற்கு “டொனால்ட் ட்ரம்ப்” எனப் பெயரிடப்பட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 700 கிலோகிராம் எடையைக் கொண்ட இந்த அரிதான வெள்ளை எருமையைப் நேரில் பார்ப்பதற்காக, அது வைக்கப்பட்டிருந்த பண்ணைக்குப் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான மக்கள் திரண்டு வரத் தொடங்கினர்.

இந்தநிலையில் பண்ணையில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததை அடுத்து, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை காரணங்களுக்காகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அதிகாரிகள் எருமையைப் பலியிடுவதற்குப் பதிலாக, அதனைத் தலைநகர் டாக்காவிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றுவதற்கு தற்போது ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்தா?

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியுள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனத் தகடுகள் தொடர்பான காவல்துறை எச்சரிக்கை!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube