Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (29) வெள்ளிக்கிழமை!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவுகளை நாளை வெள்ளிக்கிழமை (29) பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள சுமார் 07 இலட்சம் முதியவர்களுக்காக, அரசாங்கத்தினால் 349 கோடியே 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா நிதி இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

கட்டங்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடானது, முதலாம் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 312 கோடியே 56 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 36 கோடியே 83 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பயனாளிகள் அனைவரும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

வைகாசி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிய முடியும்

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடிவிவகாரத்தில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழப்பு!

சித்திரை 30, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

1,000 கோல்கள் என்ற வரலாற்று சாதனையை எட்டுவாரா ரொனால்டோ?

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube