Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடிவிவகாரத்தில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழப்பு!

2.5 million | Cyber Scam | Acquest | Death | Srilanka | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய குறித்த அதிகாரி, குளியாப்பிட்டிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவுஸ்திரேலியக் கடன் வழங்குநர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி, சைபர் மோசடி மூலம் திசைத் திருப்பப்பட்டமை தொடர்பாக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த ஏப்ரல் இறுதியில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

உயிரிழந்த அதிகாரியை வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அங்கு முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஆகியோரும், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலச்சரிவு அபாய ஆய்வுக்கான கோரிக்கைகள் 7,779 – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யக்கூடும்!

வைகாசி 29, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube