Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் அனைவரும் கட்டுப்படவேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ,

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “தாது மந்திர்” திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (28) நடைபெற்றது.

அமரபுர தர்ம ரக்‌ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய வதகெதர விமல புத்தி அநுநாயக்க தேரரின் திருக்கரங்களால் இந்த புதிய தாது மந்திர் திறந்துவைக்கப்பட்டது.

இந்த உன்னத புண்ணிய உற்சவத்தில் மகா சங்கத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டதுடன், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான பௌத்த மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

இவ்வருடம் மே மாதத்தில் இரண்டு வெசாக் போயா தினங்கள் வருவது குறித்து எழுந்துள்ள சர்ச்சை மற்றும் கலந்துரையாடல்கள் பற்றிக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துக்களையும் எடுக்கும் முடிவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அது சரியா, தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல என்பதால் அதனை நம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன், மகாநாயக்க தேரர்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தால் நாம் அதற்கு இணங்கி, தலைவணங்கிச் செயல்பட வேண்டும்.

மேலும், இம்முறை வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்து வினவியபோது, தாம் எப்போதும் போல சாதாரணமான முறையிலேயே இம்முறையும் வெசாக் தினத்தைக் கொண்டாடவுள்ளோம் என்றார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் 22 பசுக்களை ஏற்றிச்சென்ற நபர் கைது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி,மட்டு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவின் கதிர்வீச்சு சிகிச்சைகள் ஸ்தம்பிப்பு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்:இறுதி எச்சரிக்கை

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube