Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

தமிழ் மக்களின் குரலாகும் வாய்ப்புக்கு நன்றி – பிரவீண் சக்ரவர்த்தி!

tvk|vijay|praveen|

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாநிலங்களவையில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி என காங்கிரஸ் வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம் எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், தமிழ்நாட்டில் ஒரு இடம் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு சார்பில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, வேட்பாளர் பிரவீண் சக்ரவர்த்தி இன்று கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

இதுதொடர்பாக பிரவீண் சக்ரவர்த்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “முதல்வர் விஜய்யின் தலைமையிலும், ப. சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோரின் முன்னிலையிலும், மாநிலங்களவையில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்பிற்காக இன்று எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன்.

அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களை அவர்களது அலுவலகங்களில் சந்தித்து இணக்கமான முறையில் கலந்துரையாடினேன் இவ்வாய்ப்பினை வழங்கிய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும், ஒத்துழைத்த எல்லா தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் அமுலில்

ஆடி 26, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜக 184 தொகுதிகளில் முன்னிலையில்!

வைகாசி 4, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!

ஆடி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய நடிகை ஸ்ரேயா!

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube