Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி நிலைய வீரர்களுக்கு நாசாவின் அவசர அறிவிப்பு!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) காற்று கசிவு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அங்கு பணியில் உள்ள விண்வெளி வீரர்கள் தங்களது விண்கலங்களில் தங்கியிருக்குமாறு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா (NASA) அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவசர நிலைமை உருவானால் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் பேச்சாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ் (Bethany Stevens), X சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவில் உள்ள ஸ்வெஸ்டா சேவை தொகுதி (Zvezda Service Module) சுரங்கப் பகுதியில் நீண்டகாலமாக விரிசல்கள் மற்றும் காற்று கசிவுகள் பதிவாகி வந்ததாக தெரிவித்துள்ளார்.

புதிய கசிவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விரிவான பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய தொழில்நுட்பக் குழுவினர் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்வெளி வீரர்கள் தங்களது விண்கலங்களில் தங்கியிருக்குமாறு நாசா உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடனும், சர்வதேச விண்வெளி நிலையத்தை ஆதரிக்கும் பிற சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 விண்வெளி வீரர்களில் 5 பேருக்கு, பாதுகாப்பு நடவடிக்கையாக SpaceX Crew Dragon Freedom விண்கலத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

நாளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!

வைகாசி 26, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பிச்சை எடுக்கும் சீன ரோபோ!

ஆனி 14, 2026
இலங்கைஉலகம்

பதவிக்காலத்திற்குப் பின்னரும் தமிழர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்கு ஆதரவு – சுவிஸ் தூதுவர் உறுதி!

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube